எடப்பாடி, ஸ்டாலினுக்கு எதிராக தெறிக்கவிடும் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா- வீடியோ

  • 6 years ago
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மேடைகளில் பேசி சர்ச்சையை ஏற்படுத்திய விஷயங்களின் வீடியோவை இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசியல் ஆசையில் இருந்து வரும் கிருஷ்ணப்ரியா முதன்முறையாக அரசியல் தலைவர்களை கேலி செய்து பதிவிட்டுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி விழா பேரூரையாற்றினார். அப்போது காவிரி குறுக்கே கல்லணை கட்டிய கரிகால் சோழன், எண்ணற்ற கோவில்களை புனரமைத்த ரகுராத நாயக்கர், தஞ்சையின் கலை,இசை, நாட்டியத்தை உலகறியச் செய்த இரண்டாம் சரபோஜி மன்னன் என்று தஞ்சாவூரின் புகழை அடுக்கினார்.
தியாகராஜ சுவாமிகள், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற சரித்திரவான்களின் சாதனைகளைப் பெற்றது தஞ்சை பூமி என்றார். மேலும் கம்பராமாயணம் தந்த சேக்கிழாரின் புகழ் பாடும் மண் தஞ்சை மண் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கம்பரால் எழுதப்பட்ட கம்பராமாயணத்தை சேக்கிழார் என்று தவறுதலாக குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் முதல்வர் பழனிசாமியின் தவறை சுட்டிக்காட்டி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா முதல்வரின் தஞ்சாவூர் மேடைப்பேச்சு வீடியோவை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதோடு நின்று விடாமல் காலக்கொடுமை என்றும் அதற்கு கருத்து பதிவிட்டுள்ளார்.

Is Ilavarasi's daughter Krishnapriya's fb posts criticising CM Palanisamy and M.K.Stalin is the hint

Recommended