ஓவியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!- வீடியோ

  • 7 years ago
நடிகை ஓவியா மீது காஞ்சனா 3 படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர். தமிழில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரது மனதில் இடம்பிடித்தவர் ஓவியா. அந்த நிகழ்ச்சயின் மூலம் முன்னணி நடிகைகளுக்கு இணையான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றார் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஓவியா நிறைய விளம்பரங்கள், படங்கள் என கமிட்டானார். சமீபத்தில் கூட, 'காஞ்சனா 3' படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்று தகவல்கள் வந்தன. ஓவியா, ராகவா லாரன்ஸை சந்தித்த புகைப்படங்கள் கூட வைரலான நிலையில் 'காஞ்சனா 3' படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தில் இருந்து ஓவியா விலகியிருக்கிறார். இதுகுறித்து 'காஞ்சனா 3' படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர். நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டு பிறகு விலகியிருப்பதாக ஓவியா மீது குற்றம் சாட்டியுள்ளனர். 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்புகள் துவங்க தாமதம் ஆனதாலேயே, விலகுவதாக ஓவியா விளக்கம் அளித்துள்ளாராம். அதோடு தான் வாங்கிய முன்பணத்தையும், வட்டியுடன் ஓவியா திருப்பி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


The shooting of 'Kanchana 3' was delayed. In this situation Oviya has left the film. In this regard, 'Kanchana 3' crew complained to the producers council on Oviya.

Recommended