இதுதான் கமெண்டரியா..தமிழ் வர்ணனையை கிண்டல் செய்த அஸ்வின்...வீடியோ

  • 7 years ago
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. இந்த போட்டியின் போது இலங்கை வீரர் ரசல் அர்னால்ட் தமிழில் கமெண்டரி செய்தார். அவரின் அந்த காமெண்டரி மிகவும் வைரல் ஆனது. தற்போது இது குறித்து அஸ்வின் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவரை வித்தியாசமாக கிண்டலும் செய்துள்ளார். அதேபோல் ரசல் அர்னால்ட் அஸ்வினின் சாதனைக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இவர்களது விவாதம் டிவிட்டரில் வைரல் ஆகியுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் அர்னால்ட் தற்போது காமெண்டரி செய்து கொண்டு இருக்கிறார். இலங்கை தமிழரான இவர் சமயங்களில் தமிழில் பேசி காமெண்டரி செய்வார். அதே போல் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழில் இவர் பிட்ச் ரிப்போர்ட் கொடுத்தார். இது மிகவும் வைரல் ஆனது. தமிழர்கள் மட்டும் இல்லாமல் பலரும் அதை ஷேர் செய்து இருந்தனர்.

Ashwin funny tweets funny comment on Russel Arnold Tamil commentary. Russel wished him for his 300 wicket record.

Recommended