பெங்களூரில் பரபரப்பு.. தமிழக தம்பதியை குத்தி கொன்ற பேரன்..வீடியோ

  • 6 years ago
பெங்களூரை உலுக்கிய வயதான தம்பதிகள் கொலை வழக்கில் திருப்பமாக, அவர்களின் சொந்த பேரன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவன் தப்பியோட முயன்றபோது போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டான்.
பெங்களூர், எச்.ஏ.எல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, மாரத்தஹள்ளி, அஷ்வத்நகரில் வசித்து வந்தவர் கோவிந்தன் (65). பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட்டில் (பெல்) பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரோஜா (60). இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், உஷா என்ற மகளும் உண்டு.
இதில் ஒரு மகன் சில வருடங்கள் முன்பு இறந்துவிட்டார். உஷா, அருகேயுள்ள எச்.ஏ.எல் லேஅவுட் பகுதியில் வசித்து வந்தார்.

தம்பதிகள், சொந்த வீட்டின் கீழ்தளத்தில் வசித்தனர். முதல் தளத்தை வாடகைக்கு விட்டிருந்தனர். இந்த நிலையில், திங்கள்கிழமை மதியம் முதல், தம்பதிகள் வசித்த வீடு பூட்டியே கிடந்தது. நேற்று அந்த வீட்டிலிருந்து காஸ் வாடை அதிகம் வீசியது. அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள், இதுகுறித்து உஷாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் நேற்று இரவு வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே, கோவிந்தன் மற்றும் சரோஜா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

Recommended