சைலண்டாக சாதனை படைத்த புஜாரா...வீடியோ

  • 7 years ago
இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை சத்தேஸ்வர் புஜாரா செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 8 நாட்கள் விளையாடிய சாதனைக்கு அவர் சொந்தக்காரர். இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வென்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும், 5 நாட்களிலும் களத்தில் இருந்த வீரர்கள் வரிசையில் மூன்றாவதாக இணைந்தார் புஜாரா. இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்களும் அவர் களத்தில் இருந்துள்ளார். இதன் மூலம் தொடர்ந்து, 8 நாட்கள் களத்தில் இருந்த ஒரே இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார்.

முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில், முதல் நாளில் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 8 ரன்கள் எடுத்தார். இரண்டாவது நாளில், 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தார். மூன்றாவது நாளில் 15 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார் நான்காவது நாளில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் 7 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தது 5வது நாளில், 44 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.

Indian cricket player Pujara created new record

Recommended