ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டால் ஜெயில் உறுதிதான்...வீடியோ

  • 6 years ago
ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டால் நிச்சம் ஜெயிலுக்குப் போவது உறுதி; அதனால் போட்டியிட கூடாது என தினகரனை வம்படியாக தடுத்து வருகிறாராம் சசிகலா கணவர் நடராஜன். ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க வேட்பாளரைத் தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. இலையை மீட்பதற்காக இலையை எதிர்த்து நிற்கிறோம். கட்டாயம் போட்டியிடுவோம் என அறிவித்துவிட்டார் தினகரன்.

அவரது இந்த முடிவை மன்னார்குடி உறவுகள் விரும்பவில்லை. ஆனால் எனக்கு ஏராளமான இளைஞர் படை இருக்கிறது. ஏற்கெனவே வாக்குகளுக்குப் பணம் கொடுத்துள்ளோம். மக்கள் மத்தியில் எனக்கு செல்வாக்கு இருக்கிறது. அதை நிரூபித்துக் காட்ட ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. இதில் நாம் பெறப் போகும் வாக்குகள் ஆளும்கட்சிக்குத் தலைவலியை ஏற்படுத்தும். நமது பின்னால் அ.தி.மு.க தொண்டர்கள் அணி திரளவும் ஒரு வாய்ப்பாக அமையும் எனப் பேசி வருகிறார் தினகரன்.

According to the sources said that Sasikala husband Natarajan has opposed to Dinakaran to contest RK Nagar By poll

Recommended