கார்ட்டூனிஸ்ட் பாலா மீது மேலும் ஒரு வழக்கு... சென்னை போலீஸ் நடவடிக்கை!- வீடியோ

  • 6 years ago
கந்துவட்டி கொடுமைக்கு நடவடிக்கை எடுக்காத அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து உயிரிழந்தனர். இண்டு குழந்தைகளும் தீயில் கருகியதை பார்த்து தமிழக மக்கள் கொந்தளித்துப் போயினர். ஆட்சியர் அலுவலகத்திலேயே நடந்த இந்த தற்கொலை சம்பவம் பல கேள்விகளை எழுப்பின.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக லைன்ஸ் மீடியா என்ற நிறுவனம் நடத்தி வரும் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு கேலிச் சித்திரத்தை வரைந்திருந்தார். அரசையும், அதிகாரிகளையும் கடுமையாக சாடும் இந்த கேலிச் சித்திரம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் பாலாவை நெல்லை போலீசார் கைது செய்தனர்.சென்னை போரூரில் உள்ள வீட்டில் இருந்து திடீரென பாலா போலீசாரால் அழைத்து செல்லப்பட்டதோடு, அவர் வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது குறித்து முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று பாலாவின் மனைவி தெரிவித்திருந்தார்.


Chennai Triplicane police filed another case against cartoonist Bala and 3 others for conducted protest in Chennai Press club for the arrest of cartoon drawn against government in usury.

Recommended