செய்தியாளர்களை கண்டு பின்னங்கால் பிடரியடித்து ஓடிய டிடிவி தினகரன்- வீடியோ
  • 6 years ago
டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை கண்டு பின்வாசல் வழியாக ஒட்டம் படித்தார். இதனால் டிடிவி அணியினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் டிடிவி தினகரன் தலைமையில் இரட்டை இலை சின்னத்தை மீட்பது, ஆர்கே நகர் தொகுயில் போட்டிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்கு பின்னர் டிடிவி தினகரனின் செய்தியாளர்களை சந்திப்பதாக அவரது அணியினர் தெரிவித்ததையடுத்து செய்தியாளர்களும் நீண்ட மணி நேரமாக காத்திருந்தனர். ஆனால் செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்திக்காமல் ஓட்டலில் பின்வாசல் வழியே சென்றுள்ளார். இதனால் பல மணி நேரம் காத்திருந்த செய்தியாளர்கள் டிடிவி அணியினரிடம் கேட்ட போது அவர்கள் பதில் ஏதும் கூற வில்லை. இதனால் டிடிவி அணியினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Recommended