தமிழக அரசு மீது சீமான் குற்றச்சாட்டு- வீடியோ

  • 7 years ago

தமிழக அரசு சின்னத்தையும், ஆட்சி மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தி வருவதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூரில் கடந்த அக்டோபர் மாதம் தற்கொலை செய்து கொண்ட கவின் கல்லூரி மாணவர் பிகாஷின் குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பிரகாஷின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றார். கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார். மேலும் தமிழக அரசு மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் சின்னம், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதிலே குறிக்கோளாக கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Des : Tamil party leader Seeman has alleged that the Tamilnadu Government is focused on the symbol and the rule and the MGR century ceremony.

Recommended