ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை..வீடியோ
  • 6 years ago
ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று அவரது அத்தை மகளான லலிதா தெரிவித்துள்ளார். பெங்களூரில் வசிக்கும் லலிதா, தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஜெயலலிதா எனது அம்மாவின், அண்ணன் மகள். அவர் எங்கள் மாமா மகள். ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை. எங்கள் பெரியம்மாதான் அவருக்கு பேறுகாலம் பார்க்க உதவி செய்தார். ஆனால் அந்த குழந்தை அமிருதாவா என்று தெரியவில்லை. ஜெயலலிதா இந்த விஷயங்களை முன்கூட்டியே சொல்லவிடவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற மஞ்சுளா (வயது 37) சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தன்னை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் டி.என்.ஏ. பரி சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன்.பி.லோகூர், தீபக் குப்தா ஆகியோர் தள்ளுபடி செய்தனர். என்றாலும் கர்நாடக ஐகோர்ட்டை அணுகி கோரிக்கையை முறையிடலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதைத் தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்போவதாக அம்ருதா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நான் ஜெயலலிதாவின் மகள் என்பது கடந்த மார்ச் மாதம் தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டேன். ஜெயலலிதாவை என் பெரியம்மா என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தான் என் தாயார் என்று உறவினர்கள் கூறினர்.

கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ந்தேதி ஜெயலலிதாவின் மகளாக பெங்களூருவில் பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். எனக்கு அம்ருதா என்று பெயர் சூட்டினார்கள். என்னை உறவினர்கள் செல்லமாக மஞ்சுளா என்றும் அழைப்பார்கள். 3 மாத குழந்தையாக இருந்த போதே ஜெயலலிதாவின் தாயார் சந்தியா எனது தாயார் சைலஜாவிடம் என்னை தத்து கொடுத்து விட்டார்.

எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று யாருக்கும் தெரியாமல் மறைத்து வளர்த்தனர். சைலஜாதான் என் தாயார் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
இதற்கு முன்பு எனது தாயார் சைலஜா பல அ.தி.மு.க. பிரமுகர்களை சந்தித்து தான் (சைலஜா) ஜெயலலிதாவின் தங்கை என்று அவர்களிடம் கூறி இருக்கிறார். ஆனால் யாரும் நம்பவில்லை.

Jayalalitha had daughter says her close relative Lalitha, who is reside in Bengaluru.
Recommended