சசிகலாவிடமிருந்து சத்ய நாராயணா ரூ. 2கோடி லஞ்சம் வாங்கியது உண்மை..ரூபா- வீடியோ

  • 7 years ago
சசிகலாவிடமிருந்து கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்யநாராயணா ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளது என்றும் அவர் தொடுத்த மான நஷ்ட வழக்கை சந்திப்பேன் என்றும் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து பரப்பன அக்ரஹார சிறையின் டிஐஜியாக இருந்த ரூபா புகார் கூறினார். இதுகுறித்து அவர் கடந்த ஜூலை மாதம் தனது உயரதிகாரிக்கு புகார் மனுவையும் அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், சசிகலாவுக்கு சிறையில் 4 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தனி சமையலறை உள்ளது. மற்ற கைதிகளுக்கு அனுமதிக்கப்படும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட சசிகலா அதிக அளவிலான பார்வையாளர்களை சந்தித்துள்ளார்.
பார்வையாளர்களை மணிக்கணக்கில் சந்திப்பதற்கு தனி அறை என சிறையில் தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார். இந்த விதிமீறல்களுக்கு சசிகலாவிடமிருந்து சிறைத் துறை டிஜிபி சத்யநாராயணாவுக்கு சசிகலா தரப்பு ரூ.2 கோடி பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் கூறியிருந்தார்

DIG Roopa says that she has evidence for ADGP Satyanarayana got bribe from Sasikala to get special treatment in prison. She also will face defamation case filed by ADGP.

Recommended