இதுக்கு பேருதான் லக்..இந்திய அணியில் விளையாடும் கோஹ்லியின் செல்லப்பிள்ளை!- வீடியோ

  • 7 years ago
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிசம்பர் தொடக்கத்தில் இந்த ஒருநாள் தொடர் நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சித்தார்த் கவுல் என்ற புதிய வீரர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். மிகவும் குறைவான கிரிக்கெட் போட்டிகள் விளையாடி இருக்கும் இவர் கோஹ்லியின் செல்லப்பிள்ளை என்று கூறப்படுகிறது.

சித்தார்த் கவுல் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். 27 வயது நிரம்பிய இவர் 8 வருடமாக இந்திய அணியில் சேர்வதற்கு படாதபாடுபட்டு வந்தார். வலது கை பவுலிங் செய்யக்கூடிய இவர், நன்றாக பேட்டிங்கும் செய்யக்கூடியவர். சிறந்த ஆல் ரவுண்டராக இவர் செயல்படுவார் என்று கூறப்படுகிறது
இவர் மிகவும் குறைவான கிரிக்கெட் போட்டிகளே விளையாடி இருக்கிறார். ஐபிஎல்லில் முதலில் டெல்லி அணிக்காக விளையாடினார். ஆனால் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை. அதன்பின் கொல்கத்தா அணிக்காக சில போட்டிகளில் மட்டும் விளையாடினார். அதேபோல் முதல்தர போட்டிகளும் மிகவும் குறைவாகவே விளையாடி இருக்கிறார்.

The Indian squad for one day series against Sri Lanka. Siddarth Kaul has selected for Indian team. He has played with Kohli in Under 19 world cup.

Recommended