உலக அழகி, டீன் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவிற்கு..மிஸ் யுனிவர்ஸ் தென்னாப்பிரிக்காவிற்கு பின்னணி..வீடியோ

  • 7 years ago
மிஸ் டீன் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் இந்த ஆண்டு இந்தியாவில் சிருஷ்டி கவுர் பட்டம் வென்று மகுடம் சூடியுள்ளார். இதே போல உலக அழகியாக இந்தியாவின் மனுஷியும் வெற்றி பெற்றுள்ளார். மத்திய அமெரிக்காவில் உள்ள நிகாராகுவாவின் மனாகுவாவில் இந்த ஆண்டிற்கான இளம் வயதினருக்கான மிஸ் டீன் யுனிவர்ஸ் அழகிப்போட்டி கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் உடல் அழகு, தனித்திறன் உள்ளிட்ட பிரிவுகளில் முதலிடம் பிடித்து இளம் வயது மிஸ் யுனிவர்ஸ் ஆக மகுடம் சூடினார் சிருஷ்டி கவுர்.

சீனாவின் சான்யா நகரில் கடந்த வாரம் நடந்த 2017 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுசி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார். இதன் மூலம் உலக அழகி பட்டம் வென்ற 6-வது இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்
இந்த ஆண்டு நடைபெற்ற டீன் மிஸ்யுனிவர் போட்டியில் உலக நாடுகளை சேர்ந்த ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர். போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்ற 25 அழகிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர். இதில் நொய்டாவை சேர்ந்த சிருஷ்டிகவுர் இடம் பெற்றிருந்தார்.

Srishti Kaur, 19, from India was crowned Miss Teen Universe 2017 at the sixth edition of the pageant held in the Ruben Dario National Theatre.The woman representing South Africa has won has won the Miss Universe crown

Recommended