கமலை தொடர்ந்து எண்ணூர் கழிமுகத்தில் கனிமொழி ஆய்வு...வீடியோ

  • 7 years ago
எண்ணூர் கழிமுக பகுதியில் சாம்பல் கழிவுகளால் மீனவ மக்களுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து என்று திமுக எம்.பி. கனிமொழி எச்சரிக்கை விடுத்தார். கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் போக வழியில்லை என்பதால் வடசென்னைக்கு ஆபத்து என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து கமல்ஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கருத்தை பதிவு செய்திருந்தார். மேலும் வல்லூர் அனல்மின் நிலையத்தினர் எண்ணூர் கழிமுக பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். அடுத்த நாளே கமல்ஹாசன் நேரில் சென்று எண்ணூர் கழிமுக பகுதியை ஆய்வு செய்தார்.

பின்னர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அனல் மின் நிலையத்தால் போடப்பட்ட சாலையை அகற்ற கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் எண்ணூர் கழிமுக பகுதியை திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது புழுதிவாக்கம், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதுகுறித்து கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், எண்ணூர் கழிமுகப் பகுதியில் நிலக்கரி சாம்பல் கழிவால் மீனவ மக்களுக்கு ஆபத்து உள்ளது.

Rajyasabha MP Kanimozhi today visited Ennore creek and says that ash wastages are harmful for fisheries.

Recommended