4 மாணவிகள் தற்கொலைக்கு ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி காரணம் அல்ல- வீடியோ

  • 7 years ago
ஆசிரியை திட்டியதால் அரக்கோணம் பள்ளி மாணவிகள் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட விஷயத்தில் ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி காரணம் அல்ல என்று சகமாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே பணப்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தனர் மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி. இவர்கள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பள்ளிக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். அப்போது பருவத் தேர்வில் மாணவிகள் சரியாக மதிப்பெண் எடுக்காததால் ஆசிரியர்கள் திட்டியது தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்வகையில் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி, ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவிகள் 4 பேரும் பாடத்தை கவனிக்காமல், தமிழ் ஆசிரியை உள்பட 3 ஆசிரியைகளை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த ஆசிரியை அவர்கள் 4 பேரும் பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே வகுப்பறையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கூறியதால் பயந்து கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.


Recommended