வெடிக்க போகிறது, ஊரை காலி செய்யுங்கள்..அரசு எச்சரிக்கை..வீடியோ

  • 7 years ago
இந்தோனேசியாவில் இருக்கும் 'அகுங் எரிமலை' எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த எரிமலை இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றலா பகுதியான பாலி என்ற நகரத்தில் அமைந்து இருக்கிறது.

தற்போது இந்த எரிமலை அபாய கட்டத்தை அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் இருக்கும் மக்களை வெளியேறும் படி அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் அந்த எரிமலை குறித்து அதிர்ச்சியூட்டும் பல தகவல்களையும் அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டு இருக்கிறது.

இந்தோனேசியா நாட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நகரம் பாலி. ஒருவருடத்தில் சராசரியாக ஐந்து மில்லியன் மக்கள் அந்த நகரத்தை சுற்றி பார்க்க வருகிறார்கள். உள்ளூர்காரர்களையும், சுற்றுலா பயணிகளையும் சேர்த்து பல காலமாக மிரட்டி வருகிறது அங்கு இருக்கும் 'அகுங் எரிமலை'.

Agung mount volcano in Bali Indonesia reaches its danger level. Government asks its citizens living in near by places should leave immediately.

Recommended