"மதுசூதனன் அணி".. டெக்னிக்கலாக புள்ளி வைத்த தேர்தல் ஆணையம்!- வீடியோ

  • 7 years ago
இரட்டை இலைச்சின்னத்தை மதுசூதனன் அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் ஓபிஎஸ் அணிக்கு ஒரு கெத்து கூடியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராகி கட்சியை கைப்பற்றிய சசிகலா, முதல்வராகி ஆட்சியை கைப்பற்ற எண்ணினார். இதற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டையாக இருந்ததால் அவரை முதல்வர் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்து வைத்து அரியணையில் அமர நாள் குறித்தார் சசிகலா. பொறுத்தது போதும் என வெகுண்டெழுந்த ஓபிஎஸ் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்து ஓவர் நைட்டில் சசிகலாவுக்கு எதிராக மாறினார்.

அவருக்கு முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, மதுசூதனன், செம்மலை, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டட பலர் ஆதரவு தெரிவிக்க தைரியமாக கட்சியை கைப்பற்றும் பணியில் இறங்கியது ஓபிஎஸ் அணி.
மதுசூதனன் தலைமையில் எம்பி மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் , கேபி முனுசாமி உள்ளிட்டோர் கட்சி தங்களுக்கே சொந்தம் மனுத்தாக்கல் செய்து இரட்டை இலையை பெற பிள்ளையார் சுழிபோட்டனர்.

Election commission has announced the judgement on the Double leaf symbol. Election commission announced Double leaf symbol is for Madhusoothanan team.

Recommended