உங்களால் நம்ப முடியாத, பலரும் பார்த்திடாத இந்தியாவின் அசத்தல் படங்கள்!- வீடியோ

  • 7 years ago
இது நீங்கள் காணாத இந்தியாவின் புகைப்படத் தொகுப்பு! சுதந்திரத்திற்கு முன்னும், சுதந்திரத்திற்கு பின்னும் இந்தியாவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் புகைப்படங்கள் இவை. சிலவன இந்தியாவின் சிறப்பம்சங்களை குறிக்கும் படங்களாகவும். சிலவன இந்தியாவில் நடந்த சில விசித்திரமான வழக்கங்களை குறிக்கும் படங்களாகவும் இருக்கின்றன. இந்தியாவில் முதன் முதலில் நடந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாக விளங்கும் புகைப்படங்களும் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, முதல் கார், முதல் ஏர் இந்தியா பணிப்பெண், முதல் விளம்பர பதாகைகள் என உங்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த புகைப்படங்கள். கார்கள், டாக்ஸி அதிகமாக புழக்கத்திற்கு வரும் முன்னர், குதிரை வண்டிகள் தான் பயன்படுத்தி வந்தனர். இது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், 1930களில் கொல்கத்தாவில் பணக்காரர்கள் வரிக்குதிரையை வண்டி இழுக்க பயன்படுத்தியுள்ளனர். இதை தங்களது ஆடம்பரத்தை, அந்தஸ்தைப் பகட்டாக காண்பித்துக் கொள்ள செய்துள்ளனர்.

Unseen Pics From Indian History!