தலையங்க பகுதிகளை நிரப்பாமல் விட்டு கண்டனம் தெரிவித்த நாளேடுகள்!- வீடியோ

  • 6 years ago
திரிபுராவில் துணை ராணுவ அலுவலகத்தில் மூத்த பத்திரிகையாளர் சுதிப் தத்தா போமி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அம்மாநில நாளேடுகள் தலையங்கத்தை வெற்றிடமாக அச்சிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திரிபுரா துணை ராணுவப் படை வீரர் நந்து ரீங்க் என்பவருக்கும் சுதிப் தத்தா போமிக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் நந்து ந்ரீங், சுதிப்பை சுட்டுப் படுகொலை செய்தார்.

இச்சம்பவம் திரிபுரா பத்திரிகையாளர்களை கொந்தளிக்க வைத்தது. அம்மாநில முதல்வர் வீடு முன்பாக பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழங்குடிகள் போராட்டத்தை பதிவு செய்ய சென்ற பத்திரிகையாளர் சாந்தனு போமிக் கொல்லப்பட்டார்.

இப்படி தொடர்ந்து பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து திரிபுரா நாளேடுகள் இன்று தங்களது பத்திரிகைகளில் தலையங்கத்தை எழுதாமல் வெற்றிடமாக விட்டு அச்சிட்டு கண்டனம் தெரிவித்தன. அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திரிபுராவில் துணை ராணுவ அலுவலகத்தில் மூத்த பத்திரிகையாளர் சுதிப் தத்தா போமி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அம்மாநில நாளேடுகள் தலையங்கத்தை வெற்றிடமாக அச்சிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திரிபுரா துணை ராணுவப் படை வீரர் நந்து ரீங்க் என்பவருக்கும் சுதிப் தத்தா போமிக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் நந்து ந்ரீங், சுதிப்பை சுட்டுப் படுகொலை செய்தார்.

Newspapers in Tripura printed blank editorial columns Thursday to protest the ki1ling of journalist

Recommended