இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி..வீடியோ

  • 7 years ago
உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போஸ்னிய செர்பிய ராணுவ தளபதி ராட்கோ மிலாடிச், ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஐநா குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
போஸ்னிய போரின்போது இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பாயம் அதிரடியாக கூறியுள்ளது.
1992ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை போஸ்னிய செர்பிய ராணுவ தளபதியாக இருந்தவர் ராட்கோ மிலாடிச். தற்போது அவருக்கு 74 வயதாகிறது.

1992-95 காலப்பகுதியில் நடந்த பொஸ்னிய போரின்போது, இனப்படுகொலையில் ஈடுபட்டதாகவும் போர்க்காலக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகவும் ஜெனரல் மிலாடிச் 11 குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார்.

Former Bosnian Serb army commander Ratko Mladić sentenced to life imprisonment for Srebrenica massacre

Recommended