காட்டுப்பகுதிக்குள் சுடப்பட்ட 3 குழந்தைகள்.. திட்டமிட்டு நடந்த நாடகம்..வீடியோ

  • 7 years ago
பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் மூன்று குழந்தைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இந்த கொலை வழக்கில் சரியான ஆதாரம் கிடைக்காமல் போலீஸ் திணறி வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த கொலையை செய்தது அந்த மூன்று குழந்தைகளின் தந்தையும், தாய் மாமானும்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த கொலையை செய்துவிட்டு அவர்கள் இருவரும் வித்தியாசமாக நாடகம் நடத்தி இருக்கின்றனர். இதற்காக அவர்கள் கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சண்டிகரில் இருக்கும் குருஷேத்ரா என்ற பகுதியில் கடந்த வாரம் சமீர் (11), சிம்ரன் (8) , சமர் (5) என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் காணாமல் போனார்கள். இதையடுத்து இவர்களின் தாய் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். போலீசார் அங்கு இருக்கும் காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாருடன் சேர்ந்து அந்த குழந்தையின் தந்தையும், தாய் மாமனும் மற்ற ஊர் காரர்களும் தீவிரமாக தேடி இருக்கின்றனர்.

இந்த தேடுதல் பல மணி நேரம் நடந்த பின்பும் குழந்தைகள் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரின் அந்த குழந்தைகளின் தந்தை சோனு மாலிக் மற்றும் தாயமாமன் ஜெகதீப் மாலிக் ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். முதலில் உண்மைகளை கூற மறுத்த இவர்கள் பின்பு அந்த குழந்தைகளை கொன்றுவிட்டதாக தெரிவித்து இருக்கின்றனர்.

Recommended