சிம்மராசிக்காரர் ஸ்டாலினுக்கு சனிப்பெயர்ச்சி எப்படியிருக்கு தெரியுமா?- வீடியோ

  • 7 years ago
சனிப்பெயர்ச்சி சில அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு பதவி பொறுப்புகள் மனம் போல் கிட்டும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ஸ்டாலின் ராசி சிம்மம், பூரம் நட்சத்திரம். விருச்சிகத்தில் இருந்து சனிபகவான் தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். இது சிம்ம ராசிக்கு 5வது இடமாகும். புண்ணிய சனியாக அமர்கிறார் சனிபகவான்.
இதுநாள் வரை சிம்மராசிக்கு நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக அமர்ந்திருந்தார் சனிபகவான். உடல்நலத்தில் பிரச்சினை, முயற்சியில் தடங்கள், தோல்வி என இருந்தது.5வது இடத்தில் சஞ்சாரிக்கும் சனிபகவானால் நோய் நொடிகள் பிரச்சினைகள் தீரும். பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். அல்லல்பட்டவர்களுக்கு வியாதிகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

புதிய வாய்ப்புகள் உருவாகும். கூட்டணிகளும் உருவாகும். சனிபகவான் உங்களின் ராசிக்கு 7வது இடத்தை 3வது பார்வையாக பார்ப்பதால் கூட்டணியில் இருப்பவர்கள் பிரிந்து செல்ல வாய்ப்பு ஏற்படும். புதிய கூட்டணிக்கு வாய்ப்பு ஏற்படும்.

சனிபகவான் தசாம்ச பார்வையாக உங்கள் ராசிக்கு 11வது இடத்தை பார்க்கிறார். இதன் மூலம் மூத்த சகோதரரின் ஆதரவு கிடைக்கும். இதுநாள் வரை அண்ணன் தம்பிக்குள் இருந்த பிரிவுகள் நீங்கும். அண்ணனின் ஆதரவு பூரணமாக கிடைக்கும்.

Here is the Sani Peyarchi forecast for DMK working president MK Stalin.