ஆபரேசன் எலிபண்ட்... சசி குடும்பத்தை ஸ்கெட்ச் போட்டு வளைத்த பின்னணி- வீடியோ

  • 6 years ago
சசிகலா குடும்பத்தை வருமானவரித்துறையினர் ஸ்கெட்ச் போட்டு வளைத்து பிடிக்க வைத்த பெயர் 'ஆபரேசன் எலிபண்ட்' என்பதாம். பூங்குன்றன் என்ற பொறியை வைத்து திமிங்கலங்களை பிடித்துள்ளது வருமானவரித்துறை. புரட்சித்தலைவி அம்மா பெஸ்ட் சாரிட்டபிள் டிரஸ்ட், நமது எம்.ஜி.ஆர் பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட் என இரண்டு டிரஸ்ட்கள் இருக்கின்றன. ஜெயலலிதா மறைவிற்குக் பிறகு இந்த டிரஸ்ட்கள் பூங்குன்றன் வசம் இருந்தன. சசிகலா பரோலில் வந்த போது இவற்றை கைப்பற்றுவதற்காக பத்திரங்களில் கையெழுத்து வாங்கினாராம். பத்திரப்பதிவாளர்களை போயஸ்கார்டனுக்கு அழைத்த விசயம் தெரிந்தே வருமானவரித்துறை அதிகாரிகள் மோப்பம் பிடித்தனர்.

இந்த வருமானவரி சோதனைக்கு சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தினார்களாம். 'ஆபரேசன் எலிபண்ட்' என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரி ஏய்ப்பு குறித்து வருவாய் நுண்ணறிவு பிரிவு மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அதன் பிறகே சோதனை நடத்தப்பட்டது என்று வருமானவரித்துறை அறிக்கை வெளியிட்டது.

The so called Operation clean black money is dubbed as Operation Elephant, which targetted Sasikala family members.

Recommended