தாவணியில் ஸ்வீட் சமந்தா வித் சிவா! - லேட்டஸ்ட் புகைப்படம் ரிலீஸ்- வீடியோ

  • 6 years ago
சமந்தா, திருமணத்திற்குப் பிறகு தமிழில் விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் இன்னும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் SK12 படத்தில் தாவணியணிந்து தோன்றி ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்திருக்கிறார் சமந்தா. சமந்தாவின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை இயக்குநர் பொன்ராம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திருமணம் முடிந்து மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கியுள்ள சமந்தா செம க்யூட்டாக இருக்கிறார். 'இரும்புத்திரை' படத்தில் சேலை அணிந்தபடி செம ஸ்வீட்டாக வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் மெர்சல் ஆனார்கள். இந்நிலையில் சிவாவோடு தாவணியில் க்யூட்டாக இருக்கிறார் சமந்தா. சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் டிசம்பர் 22-ல் 'வேலைக்காரன்' திரைப்படம் வெளியாகவுள்ளது. கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக திரைக்கு வரப்போகும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

Samantha playing with Sivakarthikeyan in the film directed by Ponram. She has been wore half saree for this SK12 film. Latest shooting spot picture of SK12 was posted by director Ponram on twitter.

Recommended