செம த்ரில்லாக செல்லும் டெஸ்ட் போட்டி...வெற்றி வாகை சூடப்போவது யார்?- வீடியோ

  • 7 years ago
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் சறுக்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் மீண்டு வந்துள்ளது. முதல் இரண்டு நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த இரண்டு நாள் ஆட்டமும் தடையில்லாமல் நடந்துள்ளது. இலங்கை அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக கலக்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியதன் மூலம் இந்திய அணி இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. இன்னும் பாதி நாள் மட்டுமே மிச்சம் இருப்பதால் போட்டி மிகவும் திரில்லாக சென்று கொண்டு இருக்கிறது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-இலங்கை நடுவே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது . டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்தது.கோஹ்லி, கே.எல் ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். இந்தியா பேட்ஸ்மேன்கள் முதல் நாள் போட்டியில் மிகவும் சொதப்பினார்கள். அவர்களை விட மைதானத்தில் மழை நன்றாகவே விளையாடியது.

First test match between India vs Srilanka going on in Kolkatta. In first innings India all out for 172 runs. Sirlanka got 294 runs with all wicket loss. In second innings India got 352 runs with 8 wicket loss and declared

Recommended