முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்த சென்னை அணி- வீடியோ

  • 7 years ago
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை சென்னையின் எப்.சி. அணி ஏமாற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. தனது முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் கோவாவிடம் தோல்வியை தழுவியது.

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., டெல்லி டைனமோஸ், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்.சி., புனே சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி., கோவா எப்.சி., பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கோவா எப்.சி.யை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை எதிர்கொண்டது.

Chennaiyin FC began their Indian Super League 2017/18 campaign in Chennai with a 3-2 loss to FC Goa. Ferran Corominas gave FC Goa the lead and Manuel Lanzarote doubled the lead.

Recommended