அம்மாடியோவ்... இது எந்த ஊரு ரெய்டு?- வீடியோ

  • 7 years ago
கட்டுக் கட்டாக பணம், தங்க குவியல்களை யாரோ அதிகாரிகள் சரி பார்க்கும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அப்போது ஏராளமான நகைகள், ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஜெயலலிதாவின் இல்லத்திலும் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது டெம்போ முழுவதும் ஏதோ சில ஆதாரங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் பெரிய பணக்காரர்கள் கணக்கில் வராத பணம், நகைகளை பூமிக்கு அடியிலோ அல்லது பாதாள அறையிலோ புதைத்து வைப்பது வழக்கம். அது இருக்கும் இடம் அந்த குறிப்பிட்ட நபரை தவிர்த்து யாருக்கும் தெரியாது.

இந்த நிலையில் ஒரு வீடியோ, புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் ரகசிய அறையில் வங்கிகளில் இருப்பதை போன்று சிறிய சிறிய லாக்கர்கள் ஏராளமாக கிடக்கின்றன. இதுகுறித்து போட்டோ, வீடியோ வைரலாகியுள்ளது.

English summary Somewhere some officials searches in the under ground room. They found bundles of jewels and multi crores of money.

Recommended