கட்சிக்காக கோடிக் கணக்கில் வந்து குவிந்த பணம்: திருப்பிக் கொடுக்கும் கமல் ஹாஸன்- வீடியோ

  • 7 years ago
கட்சிக்காக வந்துள்ள பணத்தை திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் உலக நாயகன் கமல் ஹாஸன். உலக நாயகன் கமல் ஹாஸன் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார். கட்சி நடத்த மக்கள் பணம் தருவார்கள் என்றார். இதையடுத்து கமல் நற்பணி மன்றத்தினர் ரூ. 30 கோடி வசூலித்துள்ளனராம். இது போக மக்களும் கமலுக்கு பணம் அனுப்பி வருகிறார்கள். அதை எல்லாம் கமல் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள் என்று நான் சொன்னதை "ரசிகர்கள் கொடுப்பார்கள்" என்று ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. எனவே எனது நற்பணி மன்ற நிர்வாகிகளும், மக்களும் குழம்பி விடக்கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன். நீங்கள் பணம் அனுப்பிய அன்றே கட்சி உருவாகி விட்டது. ஆனால் கட்ட மைப்பு சரியாக இருக்க வேண்டும். இப்போது சில இயக்கங்களில் நடக்கும் குளறு படிகள் போல நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பணத்தை திருப்பி அனுப்புகிறேன் என கமல் விளக்கம் அளித்துள்ளார்.

Kamal Haasan is returning people's money to them as his political outfit is not a full fledged one.

Recommended