தமிழகத்தில் ஆளா இல்லை?... எதற்காக வெளிமாநிலத்தவரை அனுமதிக்கிறது டிஎன்பிஎஸ்சி?- வீடியோ

  • 7 years ago
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரம் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக தமிழக இளைஞர்களே காத்திருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை லட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பித்து எழுதி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வெளிமாநிலத்தவரும் இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதலாம் என்றும் வெற்றி பெறும் வெளிமாநிலத்தவர் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மாநில இடஒதுக்கீட்டிற்கே கேடு விளைவிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது

TNPSC allowed other state people to participate in competitive examinations to fullfill the government jobs which will be held on February 2018, is TNPSC feels that TN youths have not much capacity to get those jobs

Recommended