ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிய காவலர் மீது நடவடிக்கை சீமான் கண்டனம்

  • 7 years ago
ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசிய காவலர் மாயழகு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் மெரினா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தினர். இது காட்டுத்தீயாக பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவியது.

இறுதியில் போராட்டக்காரர்களுக்கு செவி சாய்த்து, ஜல்லிக்கட்டு நடத்த அரசு வழிவகை செய்தது. இதில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த வந்த காவலர் மாயழகு என்பவர் திடீரென போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகப் பேசினார். இதற்கு அப்போது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்று சொன்ன காவல்துறை தற்போது அவருக்கு பதவி உயர்வை ரத்து செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

Naam Tamilar Chief Co-ordinator Seeman Condemns the act taken on the policeman Mayazhagu who supports the Jallikattu Protest

Recommended