உச்சகட்ட நெருக்கடியில் எடப்பாடி அரசு? டிச.5-ல் க்ளைமாக்ஸ்....வீடியோ

  • 7 years ago
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எடப்பாடி அரசுக்கு கடும் நெருக்கடியை சந்திக்கப் போவதாகவும் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுநாளான டிசம்பர் 5-ல் பரபர காட்சிகள் தமிழகத்தில் அரங்கேறக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, ஓபிஎஸ் உட்பட 12 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.
இந்த இரு வழக்குகளிலுமே எடப்பாடி அரசுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும் என டெல்லி வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர்.

கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில் 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை எடப்பாடி தரப்புக்கான ஆஜரான டெல்லி மூத்த வழக்கறிஞர்களே கூறி வருகின்றனராம். அதேபோல் தினகரன் தரப்புக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக்சிங்வியும் நிச்சயம் நமக்கு சாதகமான தீர்ப்புதான் வரும் என தினகரனுக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறார்.

Sources said that the current political crisis in the TamilNadu seems to come to an end on Dec.5

Recommended