விஜய், அஜீத் சின்ன வயதில் இப்படித்தான் இருந்தாங்க..வீடியோ

  • 7 years ago
குழந்தைகள் தினமான இன்று திரையுலக பிரபலங்கள் தங்களின் சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ப்ரொபைல் பிக்சராக தாங்கள் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் சிலர் வைத்துள்ளனர்.இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் குட்டிப் பையனாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பார்க்க வித்தியாசமாக உள்ளார்.குழந்தைகள் தின வாழ்த்துக்கள். இந்த புகைப்படத்தை கண்டுபிடித்து போஸ்ட் செய்துள்ளேன். உங்களுக்குள் இருக்கும் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று ட்வீட்டியுள்ளார் தமன்னா.

நடிகை வேதிகா தான் சிறுமியாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு யார் என கண்டுபிடிக்குமாறு ரசிகர்களை கேட்டுள்ளார்.

Celebrities have posted their childhood pictures on twitter and wish the kids a happy children's day

Recommended