காவி, கை இல்லாத புதிய கூட்டணி?..வீடியோ

  • 7 years ago
பாஜக, காங்கிரஸ் கட்சி அல்லாத அரசியல் தலைவர்களை சந்தித்து வரும் நடிகர் கமல்ஹாசன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்துள்ளார். அரசியலுக்கு வந்துவிட்டேன், அதற்கான பாடங்களை அறிஞர்களிடம் கற்று வருகிறேன் என்று சொன்ன நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், விவசாயிகளை சந்தித்து வருகிறார். அரசியல் தொடர்பான பேச்சுகள் வந்த போதே கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அரசியல் தொடர்பாக கலந்து ஆலோசித்ததோடு, அவர் வீட்டில் மதிய விருந்தையும் சாப்பிட்டு விட்டு வந்தார் கமல்ஹாசன்.

பினராயி விஜயனை கமல்ஹாசன் சந்தித்ததால், மார்க்சிஸ்ட் கட்சியுடன் கைகோர்க்கப் போகிறார் என்ற பேச்சுகளும் அடிபட்டன. காரணம் அவர் இடதுசாரி சிந்தனையும் அதிகம் கொண்டவர் என்பதால். ஆனால் அதை பின்னர் கமல் மறுத்து விட்டார்.இதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து மதிய விருந்து அளித்தார். இதுவும் அரசியல் ரீதியிலான சந்திப்பாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்பதற்காக நடிகர் கமல் இன்று காலை சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டார்,

Actor Kamalhaasan met Westbengal CM Mamta banerjee

Recommended