ஜெயலலிதா இருந்திருந்தால் ரெய்டு வந்திருப்பார்களா?-சி.ஆர்.சரஸ்வதி விளாசல்- வீடியோ

  • 7 years ago
ஜெயலலிதா இருந்திருந்தால் வருமான வரித் துறையினர் ஐடி ரெய்டு நடத்தியிருப்பார்களா என்று தினகரன் ஆதரவாளரான சி.ஆர். சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்டது என்றார். ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் உள்பட சசிகலா, தினகரன் குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தினகரனும் இந்த ரெய்டுகளுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தினகரனின் தீவிர ஆதரவாளரான சி.ஆர். சரஸ்வதி செய்தியாளரிடம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் ஒரே நேரத்தில் சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் மட்டும் 200 இடங்களில் நடத்தப்படும் வருமான வரி சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும். ஜெயா டிவியும், நமது எம்ஜிஆரும் ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் இருந்தது. வரி ஏய்ப்பு செய்திருந்தால் ஒரு நிறுவனத்தை இத்தனை ஆண்டுகள் எப்படி நடத்தமுடியுமா. ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோல் ரெய்டுக்கு வந்திருப்பார்களா.

C R Saraswathi Speech about it raid.