ரெய்டுக்கெல்லாம் அசரும் கூட்டமா இது... என்ன தான் நடக்கும்?- வீடியோ

  • 6 years ago
சசிகலாவின் சொந்த பந்தங்களை அலேக்காக மடக்கிப் பிடிக்கும் விதமாக வருமான வரி சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் இது போன்ற வருமான வரி சோதனைகளுக்கெல்லாம் அசரும் கூட்டமா இது என்ற கருத்து பலருக்கும் எழாமல் இல்லை. மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலா நடராஜனை திருமணம் செய்து கொண்டு சென்னை வந்து வீடியோ கடை நடத்தி வந்தார். அப்போது ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கும் வாய்ப்பு கிடைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவுடன் நெருக்கமான சசிகலா நாளடைவில் தனது கட்டுப்பாட்டில் அவரை கொண்டு வந்தார்.

தாய் இழந்து இருந்த ஜெயலலிதா தனது வீட்டு வேலைகளுக்கு மற்றவர்களை சார்ந்து இருந்ததால் இதனை பயன்படுத்தி அவருடைய வீட்டிற்குள் நுழைந்தார் சசிகலா.
சசிகலா ஜெயலலிதாவுடன் நெருக்கமானது, அவருடைய குடும்ப கிளை உறவுகளுக்கு மிகவும் உதவியாகிப் போனது. ஜெயலலிதா பெயரைப் பயன்படுத்தி அதிகாரம் செய்ததோடு சசிகலா குடும்பத்தினர் கணக்கில் அடங்காத சொத்துகளை குவித்தனர்.

Will Income tax raids jitter Sasikala family as they face many cases and raids so far in the 30 years of their life after sasikala become close with Jayalalitha

Recommended