சென்னையில் 100 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விபத்து- உடனடியாக அகற்றம்-வீடியோ

  • 7 years ago
ராஜாஜி சாலையில் உள்ள துறைமுககாவல் நிலையம் எதிரே, தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான, 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டடம் ஒன்று இந்த கட்டடம், நேற்று இரவு, 9.15க்கு திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தினர். கடந்த சில தினங்களாக, சென்னையில் பெய்து வரும் கனமழையால் இந்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த பகுதியில் இதே போன்ற பழைய கட்டடங்கள் அதிகளவில் இருப்பதால், அவை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
சென்னையில் பாரிமுனை, கொண்டித்தோப்பு, மின்ட், மண்ணடி போன்ற இடங்களில், நூற்றாண்டைக் கடந்து வாழும் பல கட்டிடங்கள் இன்றும் உள்ளன. இத்தகைய கட்டிடங்கள் பல சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், அவற்றை இடித்துத் தள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.

A 100 century-old-building collapsed on Rajaji Salai in the city late last night, in the impact of the incessant rains in these parts for the past one week

Recommended