பண மதிப்பிழப்பு..ராகுல் காந்தி வெளியிட்ட நெஞ்சை உருக்கும் போட்டோ!- வீடியோ

  • 7 years ago
பண மதிப்பு நீக்கம் அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் வெளியிட்ட ஒரு போட்டோ வைரலாகியுள்ளது. சமீபகாலமாகவே டிவிட்டரில் திறம்பட கருத்துக்களை எடுத்து வைக்கும் ராகுல் காந்தி, பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியாகி சரியாக ஓராண்டாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அதை கருப்பு தினமாக அனுசரித்து வரும் நிலையில், அந்த ஒரு போட்டோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த படத்தை எடுத்துப்போட்டுள்ள ராகுல் காந்தி, "அழுகை மிகவும் வலி தரக்கூடியது. அவரது கண்களின் ஓரத்தில் கடலோரம் தெரிவதை பார்க்கவில்லையா" என்று பொருள்பட ஹிந்தியில் டிவிட் செய்துள்ளார்.

இந்தியர்களின் நிம்மதியை தொலைக்கச் செய்த நாள் நவம்பர் 8. ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்பது உள்ளிட்ட பிரதமர் மோடியின் அறிவிப்புகள் கோடிக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையை காவு கொண்டது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்புடன் ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு; வங்கிகளில் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது மத்திய பாஜக அரசு.

நாள்தோறும் சொந்த வங்கி கணக்கில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக ஏடிஎம்களை தேடித் தேடி அலைந்த அந்த நாட்களை இந்தியர்கள் அவ்வளவு எளிதாக கடந்து போய்விட முடியாது.. வீதிக்கு வீதி முளைத்திருந்த ஏடிஎம்கள் திடுதிப்பென மூடப்பட்டன.

"A tear is too pitfall for the regime did you not see the seaside of the Eyes" says Rahul Gandhi.
After Prime Minister Narendra Modi's demonetise announcement on Nov.8, 2016, Thousands of people lined up outside banks and ATMs across India.

Recommended