இன்றைய 3வது டி-20 போட்டி நடப்பதில் சிக்கல்.. விநாயகருக்கு பூஜை! | Oneindia Tamil

  • 7 years ago
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டிக்கு மழை இடைஞ்சலாக வந்து நிற்கிறது. போட்டி நடக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து போட்டி நல்லபடியாக நடக்க வேண்டும் என அங்கு பலரும் விநாயகருக்கு தேங்காய் உடைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

முதல் இரண்டு டி-20 போட்டிகளில் முறையே இந்தியாவும், நியூசிலாந்தும் வென்று இருக்கிறது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது போட்டி இந்த தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால் இது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த போட்டிக்கு இடைஞ்சலாக கடந்த மூன்று நாட்களாக அங்கு கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து போட்டி நடப்பது சந்தேகமாக இருந்தது. இன்று காலையில் இருந்தும் அங்கும் அதிக அளவில் மழை பெய்தது. தற்போது கொஞ்சம் மழை இடைவெளி விட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இந்த போட்டியில் மழை குறுக்கிட கூடாது என அனைவரும் விநாயகரை வழிபாட்டு வருகின்றனர்.

The 3rd T20 match between India and New Zealand may get cancelled due to heavy rain. Due to heavy rain in Thiruvananthapuram, cricket fans are praying in famous Ganapathy temple

Recommended