70% சேர்கள் காலி..பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள் வராததால் அமித்ஷா அப்செட்!- வீடியோ

  • 7 years ago
சட்டசபை தேர்தலையொட்டி, பெங்களூரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற 'பரிவர்த்தன் யாத்திரா' தொண்டர்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது. யாத்திரையை தொடங்கி வைக்க வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, இதைப் பார்த்து 'அப்செட்' அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.

அடுத்த ஆண்டு கோடை காலத்தில் இங்கு சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தேர்தல் ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளது பாஜக. இதற்காக 'பரிவர்த்தன் யாத்திரா' என்ற பெயரில் நடைபெற உள்ள தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது

கர்நாடக பாஜக தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான பி.எஸ்.எடியூரப்பா இந்த யாத்திரையை முன்னின்று நடத்த உள்ளார்.

Karnataka BJP found it very hard to get people to their rally in Bengaluru, as about 70 per cent of the seats went empty.

Recommended