50 செ.மீ மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் வெள்ளம் ஏற்படும் : பிபிசி எச்சரிக்கை- வீடியோ

  • 7 years ago
சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களில் கன மழை கொட்டித் தீர்க்கும். வெள்ள அபாயம் உள்ளது என்று வானிலைக்கான பிபிசி செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.

2015ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்தது பிபிசி. அதைப்போலவே பெருமழை கொட்டித் தீர்த்து நகரமே வெள்ளத்தில் மிதந்தது.
பல்வேறு உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் ஏற்பட அந்த பெரு வெள்ளம் காரணமாக இருந்தது. இதனால் பிபிசி வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.
இந்த நிலையில், பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கை: புதுச்சேரி, கேரளா, தமிழகம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Low pressure in the Bay of Bengal will bring the risk of flooding rains in the next few days, says BBC.

Recommended