மின்சாரம் தாக்கி சிறுமிகள் உயிரிழந்ததற்கு கண்டனம்- வீடியோ

  • 7 years ago
சென்னை நகரில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் நகர் முழுவதிலும் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கொடுங்கையூர் பகுதியில் இரண்டு சிறுமிகள் அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்ததால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடுங்கையூர் ஆர்ஆர் பகுதியை சேர்ந்த 5 சிறுமிகள் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது பாவனா யுவஸ்ரீ ஆகிய இரண்டு சிறுமிகள் விளையாடும் மும்மரத்தில் அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்துள்ளனர். அப்போது இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மின்சார ஒயர்கள் அப்பகுதியில் அறுந்து கிடப்பது குறித்து ஏற்கனவே மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தான் இரு சிறுமிகள் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமிகள் உயிரிழப்பிற்கு காரணமாகவும் அலட்சியமாக பணியாற்றி மின் வாரிய அதிகாரிகள் மற்றும் அலுவர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரண உதவிகள் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமலஹாசன் சிறுமிகள் உயிரிழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளதுடன் இது போன்ற விபத்துக்கள் நடக்காவண்ணம் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிறுமிகள் உயிரிழப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Dis : Bhavana Yuvasri, tied to the electric wreck

Recommended