சூரியின் ஹோட்டலை திறக்க ராஜஸ்தானில் இருந்து வந்த சிவகார்த்திகேயன்!- வீடியோ

  • 7 years ago
காமெடி நடிகர் சூரி, மதுரையில் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து துவக்கியுள்ள புதிய ஹோட்டலை, நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார்.
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் சூரி. பொதுவாக, நடிகர்கள் மார்க்கெட்டில் இருக்கும் போதே ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்குவார்கள். அதேபோன்று நடிகர் சூரியும் ஹோட்டல் தொழிலில் இறங்கியுள்ளார்.

மதுரை, காமராஜர் சாலையில் அம்மன் என்ற பெயரில் புதிதாக ஹோட்டல் கட்டியுள்ளார் சூரி. இந்த ஹோட்டலை திறந்துவைக்க தனது நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயனை அழைத்திருந்தார் சூரி.

அதன்படி ராஜஸ்தானில் படப்பிடிப்பில் இருந்த சிவகார்த்திகேயன், சூரிக்காக மதுரை கிளம்பி வந்து அவரது ஹோட்டலை திறந்து வைத்தார்.

Comedian Soori, opened his new hotel with his family in Madurai. His close friend actor Sivakarthikeyan opened that 'hotel amman'ei today.

Recommended