மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் மக்கள்- வீடியோ

  • 7 years ago
முடிச்சூர் அருகே வரதராஜபுரத்தில் வசிக்கும் 70 சதவிகித மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். 2 நாள் மழைக்கே வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு தஞ்சமடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று 3வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. ஒரு நாள் மழைக்கே புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. விட்டு விட்டு பெய்து வரும் பலத்த மழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையின் இருபுறத்தையும் தொட்டவாறு தண்ணீர் கரைப்புரண்டு ஓடுகிறது.அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற வழி தெரியாத சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கொரட்டூர் ஏரியின் கரையை உடைத்து கழிவு நீரை வெளியேற்றினர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Mudichur residents are highly upset over the apathy of the govt of Tamil Nadu and are vacating their places after heavy downpour

Recommended