Exclusive-திண்டுக்கல் அருகே இன்னொரு கீழடி- வீடியோ

  • 7 years ago
தமிழகத்தின் இன்னொரு கீழடியாக பழந் தமிழர் நாகரீக சான்றுகளை திண்டுக்கல் பாடியூர் கோட்டைமேடு பகுதி தன்னுள் புதைத்து வைத்திருக்கலாம் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். திண்டுக்கல்- எரியோடு சாலையில் குளத்தூரில் இருந்தும் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முள்ளிப்பாடியில் இருந்தும் உள்ளே பாடியூர் சென்றடையலாம். 30 அடி உயர மண்மேடுதான் இப்போதும் கோட்டைமேடு என அழைக்கப்படுகிறது. மிக பரந்துபட்ட அளவில் இந்த கோட்டை மேடு இருந்திருக்கிறது. அரசு பள்ளிக்கூடம் கட்டுவதற்காக இந்த மண்மேட்டின் பெரும்பகுதி அண்மையில்தான் இடிக்கப்பட்டிருக்கிறது.மேலும் இக்கோட்டை மேடு பகுதியில் பிரமாண்ட பழங்கால கிணறு ஒன்று இருந்திருக்கிறது. இந்த மண்மேட்டை இடித்துதான் அந்த பிரமாண்ட கிணறையே பள்ளிக் கட்டிடத்துக்காக மூடியும் இருக்கிறார்கள்.

The remnants of a ancient Tamil fort has been discovered in Padiyur near Dindigul.

Recommended