மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை- வீடியோ

  • 7 years ago
மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆணையர் மற்றும் அலுவலர்களிடம் அதிரடி சோதனை நடத்தினர்.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தகாரர்களிடம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆணையர் குபேந்திரனின் அலுவலகம் மற்றும் கார் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டது. அச்சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 3 மாதத்திற்கு முன் ஆணையராக இருந்த குமார் என்பவர் லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருவதால் பீதியில் உறைந்துள்ளனர் மாநகராட்சி அலுவலர்கள்.

Dis : The Vigilance Department has received information from the Vellore Municipal Corporation office to get bribe to the contractors. Following this, a team led by Additional Superintendent of Police Balasubramanian held a test drive

Recommended