சக்கரை விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ப்தி- வீடியோ

  • 7 years ago
சக்கரை விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ப்தி (Suger price increase at Tamilnadu)

நியாய விலைக்கடைகளில் வரும் 1ம் தேதி முதல் சக்கரையின் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதற்கு பொதுமக்கள் மட்டும் இன்றி அரசியல் கட்சி தலைவர்களும் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.

நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு அரசி, கோதுமை, பருப்பு, சக்கரை போன்ற பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சக்கரை 1 கிலோ 12 ரூபாய் 50 காசுகளுக்கு வழங்கப்பட்டு வந்தன. கடைகளில் சக்கரையின் விலை 1 கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. நியாய விலைக்கடைகளில் சக்கரையின் விலை ஏற்றம் ஒன்றும் பெரிதல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜீ அமைச்சர்

நியாய விலைக்கடைகளை மூட வேண்டும் என்பது தான் உலக வர்த்தக அமைப்பின் நோக்கம் என்றும் அதற்காகவே இது போன்ற விலை ஏற்றத்தை மத்திய அரசு துணையுடன் தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் ஒருங்கிணைப்பாளர் நாம்தமிழர் கட்சி

பொதுமக்களிடையே வருமை கேட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும் வருமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்று தரம்பிரிக்கப்பட்டுள்ளதாகவும் வருமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் சக்கரையின் விலையை உயர்த்தினால் எப்படி வாங்க முடியும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள்

உலக வர்தக மையத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டதால் தான் நியாய விலைக்கடைகளில் குறைந்த விலையில் வழங்கப்படும் பொருட்களின் விலைகள் ஏற்றப்பட்டுள்ளது என்றும் நியாய விலைகடைகளை மூடுவதற்கு இது தான் முதற்கட்ட தொடக்கம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். நியாய விலை கடைகளில் உயர்த்தப்பட்ட சக்கரையின் விலையை தமிழக அரசு திருப்ப பெற வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும்…

ஒன் இந்தியா செய்திகளுக்காக திருச்சியில் இருந்து அப்துல்லா…

Dis : The price of commodity prices at reasonable prices is reasonably priced because of the central government's signing in the World Trade Center

Recommended