இறந்தவர் உடலை சாலையில் வைத்து மறியல் -வீடியோ

  • 7 years ago
துறை தலைவர் கொடுத்த மன அழுத்தத்தினால் தான் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் சென்னையில் உள்ள கலை கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது பெற்றோரிடம் துறை தலைவர் மன அழுத்தம் கொடுத்துவருவதால் கல்லூரிக்கு செல்ல முடியாது என்று கூறியதுடன் தற்கொலையும் செய்து கொண்டார். பிரகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரகாஷின் உடலை அடக்கம் செய்ய கல்லரைக்கு எடுத்து சென்ற போது அவரது உறவினர்கள் தற்கொலைக்கு காரணமான துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்ததையடுத்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Dis : The student has committed suicide because of the stress that the head of the head has committed to relieving cousins

Recommended