கோஹ்லி அந்த வார்த்தையை சொல்லியிருக்க கூடாது- ஸ்மித்-வீடியோ

  • 7 years ago
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் எழுதியுள்ள 'மை ஜர்னி' என்ற புத்தகத்தில் விராட் கோஹ்லியுடன் நடந்த கசப்பான சம்பவம் குறித்து விவரமாக எழுதி இருக்கிறார். இந்தப் புத்தகத்தில் விராட் கோஹ்லி குறித்தும், இந்திய அணியின் பிளேயர்கள் குறித்தும் சில பகுதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அதில் விராட் கோஹ்லியின் ஆக்ரோஷம் பற்றி கூறியுள்ள அவர், டெஸ்ட் போட்டி ஒன்றில் நடந்த பிரச்சனை குறித்து எழுதியிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அப்போது நடந்த பிரச்சனைகளில் கோஹ்லி மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் டெஸ்ட் தொடரில் விளையாடியது ஆஸ்திரேலிய அணி. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி, ஸ்மித் இடையே நடத்த பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான தொடரை முடித்து விட்டு நவம்பர் இறுதியில் நடக்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 'ஆஷஸ்' தொடருக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அவரது வாழ்க்கை வரலாற்றை 'மை ஜேர்னி' என் புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஸ்டீவ் ஸ்மித் அதில் இடம்பெற்றிருக்கும் மிக முக்கியமான பகுதிகளை குறித்து பேசினார். இந்தப் புத்தகத்தில் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித் இடையே நடந்த சண்டை பற்றி எழுதப்பட்டது இருப்பதாக கூறப்படுகிறது.

Australia captain Steve Smith has wrote about Virat Kohli's in his new book called 'My journey'. He claims that Virat is very furious and anger person.