தமிழிசையே இப்படி தப்பு செய்யலாமா?-வீடியோ

  • 7 years ago
போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சமீபத்தில் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி குறித்த தவறான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி விஜய் ரசிகர்கள் எதிர்ப்பை சம்பாதித்தவர் தமிழிசை. இதையடுத்த பல பேட்டிகள் சிலரை உசுப்பேற்றியுள்ளன. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் தமிழிசையை கேலி செய்து பலரும் மீம்ஸ் வெளியிட ஆரம்பித்தனர். சில மீம்கள் அநாகரீகமாக இருப்பதாக கூறி தமிழிசை தரப்பில் புகார் எழுந்துள்ளது.

இரவும் கூட தனது போன் தொடர்ந்து அடித்தபடியே உள்ளது. எதிர்முனையில் பேசுவோர்கள், எரித்துவிடுவேன், கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்று தமிழிசை தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

BJP chief Tamilisai's misleading post about polio in Facebook create criticism in social media

Recommended