யாரையும் கட்டாயப்படுத்தாதீர்கள்-கமல்-வீடியோ

  • 7 years ago
தமது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்க வேண்டியது அவசியம் இல்லை என கூறியிருந்தனர்.

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சிங்கப்பூரில் அந்நாட்டு தேசிய கீதம் தினமும் நள்ளிரவில் பாடப்படுகிறது. அதேபோல் இந்தியாவிலும் தூர்தர்ஷனிலும் ஒளிபரப்பலாம்.

எனது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தை பாடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.



Actor Kamal Haasan also joined the National Anthem Issue.

Recommended